டெல்லியில் ஓடும் பேருந்தில் நிகழ்ந்த கொடுர சம்பவத்தை ஒட்டி
பல்வேறு எதிர்வினைகள் நடந்து கொண்டிருக்கிறது. கவர்ச்சிகரமான உடை அணிவ்து,
இரவில் தனியே செல்வது, ஆணுடன் செல்வது போன்றவைதான் இதற்கு காரணம் என்று
கூறுவது ஒரு புறம் இருக்க, மார்கண்டேய கட்ஜ போன்றவர்கள் ‘இதிலேயே கவனம்
செலுத்தாதீர்கள், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை இருக்கிறது,‘ என்று நமக்கு
சுட்டிக் காட்டியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
என்னவோ, சினிமாக் கதாநாயகியின் திருமணத்தை, விவாகரத்தை ஊட்கங்கள் ஊதிப் பெருக்கி செய்தியாக்குவது போல் அதை ஒதுக்கிவிட்டு மற்ற பிரச்சினைகளுக்கு முக்க்கியத்துவம் அளிக்கச் சொல்கிறார்கள். மறுபுறம், வாச்சாத்தி பிரச்சினை, தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை, வினோதினி மீதான ஆசிட்வீச்சு போன்றவற்றை விடவா என்று கேட்கிறார்கள். இதே முகநுலில் நடந்த உரையாடலில் ‘பாலியல் ரீதியாக வன்ம்மாக பேசி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள்‘ என்று சின்மயி புகார் செய்த போது, சின்மயிக்கு ஆதரவளித்தவர்கள் கூட இப்படி பேசுவது கண்டனத்திற்குரியது.
ஈழத்தில் நடந்த வன்முறைகள் போர்சுழலில் நடந்தவை. வாச்சாத்தியும் ஆதிக்கத்தின் வெளிப்பாடாய் நிகழ்ந்த்து. தினமும தலித் பெண்கள் மீது நடைபெறுவது சாதி ஆதிக்கத்திலிருந்து வெளிப்படுவது. தன் காதலை நிராகரித்த பெண் மீது ஆசிட் வீசியதில் கூட தனிப்பட்ட குரோதம் தெரிகிறது. டெல்லி சம்பவ்த்தன்றே மும்பையில் பேருந்திற்காக காத்திருந்த 23 வயது மாணவியை தன் மனைவி என்று நினைத்து பின்புறமாக கத்தியால் குத்தியிருக்கிறான் ஒரு ஆண். இங்கு கூட தனிப்பட்ட உறவின் குரோதம் தவறாக வேறு பெண் மீது பாய்ந்திருக்கிறது.
ஆனால் டெல்லி சம்பவத்தில் அந்தப் பெண்ணை அவர்களுக்கு யாரென்றே தெரியாது. அவள் ஒரு பெண் அவ்வளவுதான். அவளது சாதி, மதம், வர்க்கம், இனம் எல்லாவற்றையும் தாண்டி அவள் இரவு நேரத்தில் ஆணோடு வந்தது ஒன்று தான் அவள் செய்த தவறு. பிடிக்காத சாதியோ, இனமோ, தன்னை ஏமாற்றிய பெண்ணோ அல்ல அவள். அந்த ஆண்களும் தங்கள் அதிகார வெறியை காண்பிக்கும் திறன் பெற்ற பெரிய அதிகார வர்க்க வாரிசுகள் அல்ல. நம்ம சமூகம் தான் ஒரு ஆணை சாதி, மத, வர்க்கம் என்று எல்லா இதர வகைகளிலும் அடக்கப் படுபவனாய் இருந்தாலும், பெண்ணென்று வரும் போது சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையென்றும், இயற்கையைப் போல ஆண்களின் உபயோகத்திற்கு படைக்கப்பட்டவள் பெண் என்றும் வளர்க்கப்டுகிறார்களே. அதன் விளைவு இது. இது சராசரி ஆண்களுக்கானது.
சமூக அக்கறையோடு உலவும் ஆண்களுக்கு கூட, திடீரென எதிர்பாராத விதமாக ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, உடல் ரீதியாக கொடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டால் என்ன மாதிரியான மனவலிக்கு ஆட்படுவாள் என்பதை உணர்ந்து கொள்ளாமல் பேசும் போது இது போன்ற குற்றம் செய்பவர்களுக்கு உடலளவில் ஏதாவது ஒரு ஊனத்தை அல்லது கிராமங்களில் சொல்வது போல் காயடித்து விடுவதுதான் இந்த வகைக் குற்றத்திற்கு சரியானதாக இருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது
சாதி அரசியல் பேசுபவர்கள் சாதி ரீதியாகவும், வர்க்க அரசியல் பேசுபவர்கள் வர்க்க ரீதியாகவும், இன அரசியல் பேசுபவர்கள் இன ரீதியாகவும் பெண் பாதிக்கப் பட்டால்தான் அவர்களுக்கு குரல் கொடுப்போம் என்பதைக் கூட நடைமுறையில் அவ்வளவுதான் இயங்க முடியும் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்தப் பெண்ணுக்காக போராட்டஙகள் நடைபெறுவதையும் அதை மீடியாக்கள் ஒளி பரப்புவதையும் ஊதிப்பெருக்குகிறார்கள் என்று சுருக்குவது அடிப்படையில் சமூக நலனுக்கு விரோதமானது..
வரலாற்றில் ஏற்ற தாழ்வுள்ள இந்த சமூகத்தில் உயர் சாதியில் பிறந்த பெரியார்தான் சமூக நீதியைப் பேசினார். பெரும் தொழிற்சாலைக்கு சொந்தக்கார்ராரின் மகனாகப் பிறந்த ஏங்கெல்ஸ்தான் சொத்தை தொழிலாளக்ளுக்கு எழுதி வைத்து கம்யூனிசம் பேசினார். இன்றும் மகாசுவேதா தேவி, அருந்த்தி ராய், அம்பை என ஒரளவிற்கு நடுத்தர வர்க்க . சாதி பின்னணியில் பிறந்தவர்கள் தான் சமூக மாற்ற கருத்துக்களையும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நடுத்தர வர்க்கப் பெண்கள்தான் அரசியல் தளங்களிலும்,அறிவுத்தளங்களிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் இயங்கி வருகிறார்கள். அவர்கள் வெளியில் வருவதற்கே தடைபோடும் விதமாக அச்சுறுத்தும் விதமாக இது போன்ற செயல்கள் நடைபெறுவது சமூகம் மேலும் கேவலமான சீரழிவிற்கு செல்வதைதான் காட்டுகிறது. இவர்களுக்கே இந்த நிலை எனில் அடித்தட்டு சாதி. வர்க்க பெண்கள் பற்றி அலட்டிக் கொள்வதற்கு ஒன்றும் இல்லை.
ஏன் இந்த வலைத்தளங்கள் கூட யாருக்கானவை.முகநுலில் எழுதுகிற நம்மை விட அறிவாளியாக, ஒரு கம்ப்யூட்டரை வாங்க முடியாத நிலையில் உள்ளவர்களால் சிந்திக்க, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க முடியும். ஆனால் அவர்களது குரல் இங்கு பதிவாகாது. இதற்காக இந்த சமூக வலைத்தளங்களை ஒதுக்கிவிட்டு சென்று விட முடியுமா.
இந்த பெண் மருத்துவக் கல்லுரி மாணவி, குறைந்த்து நடுத்தவர்க்க பின்னணி கொண்டவர். மாணவி வேறு. இயல்பாக இந்த பின்புலத்திலிருந்து போராட்டம் நடக்கிறது. ஊடகங்கள் ஒளிபரப்புகின்றன.
இதே அளவு முக்கியத்துவம் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பிரச்சினைகளுக்கும் அளிக்கப் படவேண்டும என்று கோருவதே சரியானதாக இருக்க முடியும். ‘ரேப் பிரச்சினை‘ என்று சாதாரணமாக ஒதுக்கினால் நாளை ‘சுதந்திரமாகத்தானே பெண்களெல்லாம் இருக்கிறார்கள்‘ என்பதற்கு பெயரளவு சாட்சியாக இருக்கும் குறைந்த பட்சப் நடுத்தர வர்க்கத்து பெண்களின் உரிமையும் பறிக்கப்பட்டு பெண்கள் வீட்டில் முடங்க வேண்டியதுதான். சாதி, வர்க்க, இன மொழி அரசியலையெல்லாம் ஆண்கள் மட்டுமே வாய்கிழிய பேசிக் கொண்டு திரிய வேண்டியதுதான். பெண்க்ள் யாரும் சமூக நலனுக்கான போராட்டத்திற்கு வர மாட்டார்கள்.