Sunday, March 23, 2014

மொழிபெயர்ப்புக் கவிதைகள்






கேதரின் மேன்ஸஃபீல்டு (14 அக்டோபர் 1888 – ஜனவரி 9 1923) புகழ் பெற்ற நவீன எழுத்தாளர் .காலனியாதிக்கத்தின் கீழிருந்த நியூசிலாந்தில் பிறந்தவர். பிறகு லண்டனில் குடியேறினார். டி.ஹெச். லாரன்ஸ், விர்ஜீனியா உல்ப் போன்றோரின் தோழியும் கூட. கவிதைகளைப் போலவே சிறந்த சிறுகதைகளையும் எழுதியுள்ளார். காச நோயால் பாதிக்கப் பட்டு தனது 34 வது வயதிலேயே காலமானவர்.
.........................................................................
 
 
 
 
மூலிகைத் தேனீர்
...........................................
 
வெளியே நட்சத்திரங்கள் நிறைந்த வெளிர்வானம் 
கடலிலிருந்து எழும் வெற்று சீற்றம்
பாவம்,, அந்தச் சின்னஞ்சிறு அல்மண்ட் மலர்கள்
காற்றோ அல்மண்ட் மரத்தைக் லுக்கி எடுக்கிறது
 
எவ்வளவு சிறியது,, ஒரு வருடம் முன்பு என நினைக்கிறேன்
அந்தக் கோரமான குடிசைக்கு அடியில் காற்றுக்கு ஓதுங்கி
நானும் அவனும் அப்படித்தான் அமர்ந்திருநதோம்
கோப்பை மூலிகை தேனீரைச் சுவைத்துக் கொண்டு
 
சிறகு போன்று லேசாகப் பறந்து கொண்டிருந்தனர் சூனியக்காராகள்
நிலவின் கொம்புகள் தெள்ளத் தெளிவாகவே தெரிந்தது
அருகில் தாழம் பூக்களுக்கு அடியில் மினமினி பூச்சி 
ஒரு குறும்புக்கார பூதம் ரீங்காரமிடும் தேனீயைச் வறுத்து கொண்டிருந்த்து
 
நாங்கள் ஐம்பது வயதாக இருக்கலாம், ஐந்து வயதாகவும் இருந்திருக்கலாம்
நாங்கள் மிக நெருக்கமாக, மிக இணக்கமாக, 
அவ்வளவு புத்திசாலிகளாகவும் இருந்தோம்
சமையலறை மேசையின் கால்களுக்கடியில்
என்னுடைய முழங்கால் அவனது முழங்காலை அழுத்தியது
 
எங்கள் ஜன்னல்கள் மூடிக்கொண்டன, தீ தணிந்திருந்தது
குழாய் நீர் அமைதியாக சொட்டிக் கொண்டிருந்தது
சட்டியின் நீண்ட கைப்பிடி சுவரில் நிழலாடியது
எல்லாம் அச்சுறுத்துவதாகவும், வரையறுக்கப்பட்டதாகவும்  
தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
 
...................................................................................................................
செவ்வானத்தின் குறுக்கே
...............................................................
செவ்வானத்தின் குறுக்கே இரு பறவைகள் 
தொய்ந்த சிறகுகளுடன் பறந்து கொண்டே இருக்கின்றன
அச்சுறுத்தும் துர்குறியாய் அமைதியும் தனிமையும்
நாள் முழுதும் வெற்றிகளிப்போடு மஞ்சள் பதாகையுடன் சூரியன் 
பூமியோடு மீண்டும மீண்டும் போராடி, அறுவடைசெய்து முடிக்கும் தருணம்
அவளது இதயத்தல் குத்தி, அவளது இரத்தத்தை தேவகிண்ணத்தில் நிரப்பி
அந்தி வானம் முழுக்க தெளிக்கின்றனர்
கறுத்த அடர் சிறகுடைய பறவைகள் பறந்து பறந்து
தங்கள் துயர்மிக்க நிழலால் பூமி முழுவதையும் மறைக்கிறது
அவளது பார்வையற்ற கண்கள் செவ்வானமாகி
ஓய்வின்றித் தேடுகின்றன பறவைகளை 
 
...............................................................................................................

வண்ணத்துப் பூச்சியின் சிரிப்பு
.......................................................................
 
கஞ்சித் தட்டுகளுக்கு மத்தியில்
நீல நிற வண்ணத்துப் பூச்சி ஒன்று வரையப்பட்டிருந்த்து
ஒவ்வொரு காலையிலும அந்த வண்ணத்துப்பூச்சியை 
யார் முதலில் அடைவதென்று போட்டி நடக்கும்
அப்பொழுதெல்லாம் பாட்டி சொல்வார்
பாவம், அந்த பட்டாம் பூச்சியை தின்றுவிடாதீர்கள்
பாட்டி சொல்வது எங்களை சிரிக்க வைக்கும்
ஒவ்வொரு முறை அவர் சொல்லும் போது 
எங்களுக்கு அது சிரிப்பூட்டுவதாகவே இருக்கும்
அவ்வளவொரு அழகான இனிமையான நகைச்சுவையாய் 
தோன்றும் அது எங்களுக்கு 
அழகிய காலைப் பொழுதொன்றில் அவ்வண்ணத்துப்பூச்சி 
எங்கள் தட்டுகளிலிருந்து பறந்து 
உலகிலேயே குட்டியான குழந்தைச் சிரிப்பொன்றை
உதிர்த்து கொண்டே
பாட்டியின் மடியில் அமரும் என்பதும் எனக்குத் தெரியும்.
 
........................................................................................................
தமிழில் இந்திராகாந்தி அலங்காரம்
2014-03-22