Saturday, July 23, 2011

கரப்பான்களின் உலகம்

கரப்பான் பூச்சிகள்
கிழக்கிலிருந்தும்
மேற்கிலிருந்தும்
சிவப்பு வண்ணம் பூசி
அடர் இருட்டிலிருந்தும்
சில சமயம் வீட்டின்
மறைவிடங்களிலிருந்தும்
கிடைக்கும் வழிகள்
எல்லாவற்றின் ஊடாகவும்
ஊர்ந்து மட்டுமே வருகின்றன
இறக்கை இருப்பை மறந்து.

பறந்தாலும்
வீட்டுக் கூரையின் உயரம்
தாண்டியதில்லை
வெட்டவெளியில் பட்டப்பகலில்
பறக்கும் கரப்பான்களை கண்டதில்லை.

அழுக்கும் இருட்டும் சாசுவதமான
கரப்பான்கள் கடித்து
மரணிக்கப் போவதில்லையெனினும்
எறும்புக்கடியின் வீர்யமுண்டு.

அதில்
வலியைவிட
அருவருப்புதான் அதிகம்.

அருவருப்பும் பயம் தானாம்
பயமும் என் உணர்வுதானே.

ஆனால்
உனக்கெதற்கு உணர்வு
எனக் கேட்கிறது
கரப்பான்களின் உலகம்