Friday, April 24, 2015

கறுப்பு வெள்ளை
ஒற்றைக் கோடு வளைந்து நெளிந்து சிதறிய
ஓவிய எண்ணங்களை
படிக்கத் தெரியவில்லை
ரசிக்கப் பிடிப்பதில்லை
கண்ணுறவே திராணியில்லை
ஒவ்வொரு கோடும் கருந்திட்டும்
மூளையுள் நெளிகின்றன புழுக்களாய்
மரபணு பரிசளித்த மெல்லுணர்வுகளை
கொல்கின்றன குரூரமாய்
ரத்தநாளம்வெடிக்கும் பீதி
படபடக்கிறது இதயத்தில்
கண்களை மூடித் தப்பிக்க முயல்கிறேன்
புரியா அறிவிலி என்கிறார்கள்
உங்களுக்குந்தான்,,,
புரியாததுதான் பிரச்சினை

புரியவைப்பது?