பிரிவை விழாவாக்க் கொண்டாடும் வழக்கம்
அறிவின் முதிர்ச்சியா
அறிவின் பாசாங்கா
அல்லது உணர்வின் பிறழ்வா
இது உலகெங்கிலும் உள்ள வழக்கமா
தெரியவில்லை
பிரிவு உபச்சார நிகழ்விற்கு
அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள்
என் வகுப்பு நண்பன்
தன்னைத் தயார்படுத்திக் கொள்ள
தெரியாமல் தவிர்த்து விட்டுச் சென்றான் அப்பிரிவை
அவரவர்களின் பிரிவில் அவரவர்களின் வலி
பிரிவு பற்றியும்
பிரிந்து செல்பவரைப் பற்றியும்
நிறையப் பேசினார்கள்
நானும்தான்
பிரிவு தவிர்க்க இயலாத்து
இயல்பானது
வலிதரக்கூடியது
ஆனாலும் வருத்தப்படத் தேவையில்லை
என்று நிருபிக்க முயற்சித்தேன்.